Isha Natural Honey 500gms
Health

இயற்கை கொடுத்த வரம் தேன்-Honey

ஈஷா பியூர் தேன் (Honey)- 500 கிராம்

தேன்-Honey இயற்கை அளித்த வரம், இல்லந்தோறும் இருக்க வேண்டிய பொக்கிஷம். எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

  • பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
  • பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும் .
  • மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உருவாகும்.
  • எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும் .
  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் .
  • ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் .
  • ரோஜாப்பு குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தனியும்
  • தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் வாய்ப்புண் ஆறும் .
  • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும் .
  • தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
  • தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
  • தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
  • அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

அழகுப் பராமரிப்பில் தேன்-Honey:

மாய்ஸ்சுரைசர்:

தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர். ஏனெனில் இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பதமானது தக்க வைக்கப்படுவதோடு, சருமத்தை மிருதுவாக்கி அதன் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கிறது.

சரும சுருக்கம்:

தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்:

தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.

காயங்களை குணமாக்கும் தேன்:

காயங்களை சுத்தப்படுத்தி, நாற்றம் மற்றும் சீழ் உண்டாவதை தடுத்து, வலியை குறைத்து காயம் விரைவாக குணமடையவதற்கு உதவுகிறது.

சரும பிரச்சனைகள்:

தேனானது சேதமடைந்த சருமத்தை சீர்படுத்தி புதிய செல்கள் உருவாவதற்கு உதவுகிறது. அதிலும் சரும அழற்சி, சரும பிரச்சனைகள் ஆகியவற்றை சரிப்படுத்தும்.

சொறி, சிரங்கு, படை:

தேனில் உள்ள பூஞ்சை எதிர்க்கும் பண்புகள் படை, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.
சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும் தேனில் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றான்கள் (Oxidants) நிறைந்துள்ளது. இவை சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து காக்கிறது.

முதுமை தோற்றத்தை தடுக்கும் சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிக நேரம் பட்டால், அது சருமத்தை சேதப்படுத்தி முதுமை தோற்றத்தை ஏற்படச் செய்யும். ஆகவே தேனை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், அது சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும்.

முகப்பரு:

தேன் சருமத்தின் மேல் அடுக்கில் நுழைந்து, துகள்களில் ஊடுருவி அசுத்தங்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நோய்த்தொற்று மற்றும் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

அழகான உதடுகள்:

சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.

ஊட்டச்சத்துக்கள்:

தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள்:

மேலும் அதில் மகரந்த தன்மைக்கு ஏற்ப வைட்டமின்களான பி1, பி2, சி, பி6, பி5 மற்றும் பி3 ஆகிவை அடங்கியுள்ளன. அவை மட்டுமின்றி தாமிரம், அயோடின், மற்றும் துத்தநாகம் ஆகியவையும் சிறிய அளவில் உள்ளன.

தசைப் பிடிப்பு:

குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் வடிவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றல் அளித்து தசைகள் சோர்வடைவதைக் குறைக்கும்.

இரத்தசோகை:

தேன் அருந்துவதை வழக்கமாக கொண்டால், கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, இரத்தசோகை நோய்க்கு எதிராக போராட உதவும்.

கொலஸ்ட்ரால்:

தேன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.

சுவாசப் பிரச்சனைகள்:

தேனில் சளி நீக்கும் பண்பு மற்றும் ஆறுதல் அளிக்கும் தன்மை இருப்பதால், சுவாசக் குழாயில் இருக்கும் நோய்த்தொற்றுகளை சரிசெய்யும்.

நோய் எதிர்ப்பு  சக்தி:

தேன் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

எடை குறைவு:

உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் பண்பு தேனுக்கு உள்ளது. மேலும் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.

மேலும் பல பயன்கள் …..

வயல்வெளி இயற்கை களஞ்சியம்

இயற்கை தேன்-Honey பெற ஆனுகவும்: https://vayalveli.in/product-category/isha-honey/

To Get Natural Honey பெற ஆனுகவும்: https://vayalveli.in/product-category/isha-honey/

Related posts

Leave a Comment

X
%d bloggers like this: