Palm-jaggery-health-benefit/பனை கருப்பட்டி
Uncategorized

கருப்பட்டி – பனை கருப்பட்டி எனும் பொக்கிஷம்

கருப்புக்கட்டியில் இருந்து கருப்பட்டி:

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படுற பதனியில இருந்துதான் பனை கருப்பட்டி செய்யுறாங்க. இந்த கருப்பட்டி பேர் எப்படி வந்ததுனா பதநீர்ல இருந்து எடுத்த கருப்புக்கட்டி பேச்சுவழக்கத்துல கருப்பட்டினு மாறிடுச்சு. பனை மரம் யாராலயும் பயிரிட்டு வளர்க்கப்படுற மரம் கிடையாது. தானாகவே வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் நன்கு வளர்ந்து பலனை கொடுக்க 15 வருடம் வரை ஆகும், சாதாரணமாக 25-30 மீட்டர் உயரம் வளரும் இத்தகைய சிறப்புகளை தன்வசம் கொண்டுயிருப்பதுதான் இந்த பனை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க யானைக்கு சரிசமமா நம்ப முன்னோர்கள் சொன்னது பனையைத்தான் இதுக்கு காரணம் இருக்கு வளர ஆரம்பிச்சதுலேயிருந்து ஆயுள் முழுவதும் மனித குலத்திற்கு பல நன்மைகளை தருவது பனை மரம்.

தயாரிக்கும் முறை:

பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் பனை கருப்பட்டியனது கிடைக்கும். நமக்கு தேவையான வடிவில் செய்து கொள்ளலாம்.

மாற்றம்:

மாற்றம் ஒன்றே மாறாதது” என யாரோ சொல்ல கேட்டதுண்டு இந்த வாக்கியம் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபிக்க போகிறது white sugar (வெள்ளை  சீனி) இதற்கு மாற்றம் கொண்டுவரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் அனைவரும் இருக்கிறோம் இதற்கு காரணம் வெள்ளை சீனியின் பக்க விளைவுகள்தான். வெள்ளை சீனியை தொடர்ந்து சாப்பிட்டால் நியாபகமறதி அதிகமாகும் மேலும், பக்கவிளைவுகளை தரக்கூடிய வெள்ளை சீனிக்கு ஒரு சிறந்த மாற்றாக கருப்பட்டியை பயன்படுத்தி பல பலன்களை பெறலாம்.

பலன்கள்:

  • கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
  • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
  • கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிடுவதால் மேனி பளபளப்பு பெறும்.
  • வெள்ளை சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.
  • பருவம் அடைந்த பெண்கள் கருப்பட்டி கலந்த உளுந்தங்களி சாப்பிடுவதால் அவர்கள் இடுப்பு எலும்புகள் வலிமை பெரும். மேலும் கருப்பை வலிமை பெரும்.
  • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
  • நன்கு பசி எடுக்க சுக்கு கருப்பட்டியுடன் வறுத்த சீரகம் கலந்து சாப்பிட வேண்டும்.
  • கருப்பட்டியுடன் ஓமம் கலந்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
  • வதக்கிய குப்பைமேனி கீரையுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட வறட்டு இருமல் நீங்கும் மேலும் சளி தொந்தரவு சரியாகும்.
  • சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டியுடன் டீ அல்லது காபி பருகுவதன் மூலம் அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
  • நன்கு விளைந்த தேங்காயை கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட உடல் வலிமை பெரும்.
  • ஆண்மையை பெருக்குவதில் கருப்பட்டியனது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்படையும், தோல் பளபளப்பு அடையும், ரத்தம் சுத்தம் ஆகும், தேவையான கால்சியம் கிடைக்கும், எலும்புகள் உறுதிபெறும், இதில் குளுகோஸ் நிறைந்துள்ளதால் மெலிந்த உடலை சீராக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள பித்தத்தை நீக்குகிறது.

மேலும் தெரிந்துகொள்ள:  Palm Jaggery

வயல்வெளி இயற்கை களஞ்சியம்

நீங்கள் கருப்பட்டி -யை பெற அனுகவும்: https://vayalveli.in/product/karupatti-palm-jaggery/

Related posts

Leave a Comment

X