Description
காண்யே பற்பொடி:
ஏன் காண்யே பற்பொடி? மூலிகைகள் பல கொண்டு நம் முன்னோர்கள் அரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி”
– நாலடியார்
இப்பழமொழி யாவரும் அறிந்ததே… ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் கொண்டு பல்துலக்கினால் பற்களும், ஈறுகளும் வலிமை பெறும் என்பதே… நமக்கு தற்பொழுது பற்களை பாதுகாக்க கிடைத்துள்ளது – வயல்வெளி – காண்யே பற்பொடி.
காலை மாலை இருவேளையும் கைவிரல் கொண்டு பல் துலக்கி வர அதிக பலன் கிடைக்கும்.
பயன்கள்:
- பல் கூச்சம்
- பல் ஆட்டம்
- ஈறுகளில் வலி
- பல் வலி
- பல்லில் சீழ் வடிதல்
- வலுவிழந்த பற்கள்
- பல்லில் ரத்தம் வருதல்
- பல் சொத்தை
போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா?
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை இயற்கையான முறையில் எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம்.
காலை எழுந்ததும் நாம் செய்பவை தேநீர் அருந்துவது. ஆனால் செய்யவேண்டியவை வேறு ஒன்று உள்ளது. இன்றைய நவீன உலகத்தில் படுக்கையிலேயே காபி (BED COFFEE) எனும் நம் ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுக்கக்கூடிய செயல்களை செய்துகொண்டுள்ளோம்.
நாம் செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் இதையே பழக்கி விடுகிறோம். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியமும் படிப்படியாக சீர்குலைந்து வருகிறது.
பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இல்லத்தரசிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஒரு அதிர்ச்சியான முடிவு பெறப்பட்டது.
காலை எழுந்ததும் படுக்கையிலேயே காபி அருந்தும் பழக்கம் (அதாவது பல் துலக்காமல்) யாரிடம் உள்ளது என நேரடியாக கேட்கப்பட்ட கேள்விக்கு 10 இல் 3 பேர் பல் துலக்கிவிட்டு தான் மற்ற செயல்கள் செய்வதாகவும், 3 பேர் காபி அருந்துவதாகவும், 4 பேர் கோபப்பட்டு நான் காபி குடிப்பது இல்லை டீ தான் என சொல்கிறார்கள். மொத்தத்தில் 7 பேருக்கு இந்த பழக்கம் உள்ளதாக அறியப்படுகிறது.
இதில் வருத்தம் தரக்கூடிய நகைச்சுவை என்னவென்றால் நான் காபி குடிப்பதில்லை டீ தான் என சொல்கிறார்கள். டீயோ காபியோ காலையில் பல் விளக்காமல் செய்தால் தவிர்க்க முடியாத பேராபத்தில் மாட்டுவது உறுதி.
இரண்டு வேளை பல் விளக்க வேண்டும் என்று படிக்கும் காலத்தில் இருந்தே கற்று தந்துள்ளனர். ஆனால் அதை கடைபிடிப்பதில்லை, இரண்டு வேளை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, காலை மட்டுமாவது முறையாக செய்ய வேண்டும். அதையும் செய்ய தவறியதன் விளைவுகளே மரபு சாரா நோய்களாக (NON-COMMUNICABLE DISEASE) நம்மை ஆள தொடங்கியுள்ளது.
வாய் தான் நமக்கு தேவையான அனைத்து உணவுகளையும் உள்ளே எடுத்து செல்கிறது, அனைத்திற்கும் ஆதாரம் என உணர்ந்து நாள்தோறும் வயல்வெளியின் கேச்சா ஆயில், கொண்டு எண்ணெய் கொப்பளித்தல் செய்தும் மற்றும் பாராம்பரிய முறைப் படி தயாரிக்கப்பட்ட வயல்வெளியின் காண்யே பற்பொடி கொண்டு கை விரல்களால் (NO BRUSH) பல் துலக்கியும் வர ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.
Reviews
There are no reviews yet.